தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் மக்கள் அனுமதி...

சென்னையில் இன்று (ஜூன் 25) முதல், சில கட்டுப்பாடுகளுடன், புறநகர் மின்சார ரயில்களில் பொது மக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

By

Published : Jun 25, 2021, 7:34 AM IST

Updated : Jun 25, 2021, 7:45 AM IST

Suburban trains  Suburban trains in Chennai running from today  chennai news  train  train running status  chennai latest news  train time  chennai train  tamilnadu latest news  today news  சென்னை செய்திகள்  ரயில் சேவை  ரயில் நேரம்  ரயில் இயக்கம்  சென்னை ரயில் இயக்கம்  ரயில்  முகக்கவசம் இல்லாமல் இருந்தால் அபராதம்  அவராதம்  மின்சார ரயில்  electric train  chennai electric train timing
புறநகர் மின்சார ரயில்களில் மக்கள் அனுமதி...

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மேலும் அத்தியாவசியப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று (ஜூன் 25) முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

24 மணி நேரம் அனுமதி

பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி...

இதையடுத்து மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதிமன்றம், சுகாதார, மாநகராட்சிப் பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் அடையாள அட்டையுடன் பணியாளர் சிறப்பு ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான நேர கட்டுப்பாடுகள்

ஆண் பயணிகளுக்கான நேரம்...

புறநகர் ரயில்களில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும் ஆண் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

அபராதம்

ரூ.500 அபராதம்...

இன்று (ஜூன் 25) முதல் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து- சட்டப்பேரவை தேர்தல்- மோடி கூட்டத்தில் காங்கிரஸ் 5 கோரிக்கை!

Last Updated : Jun 25, 2021, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details