சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்ததில், அவர் சாலையில் தடுமாறி விழுந்தார். இதில், பின்னால் சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயராமனை 12 நாட்களுக்குப் பின்னர் கைது செய்தது. இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.