சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் சுபஸ்ரீ(22). பி.டெக் பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு கடந்த 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ முதல்வகுப்பில் தேர்ச்சி..! - முதல் வகுப்பில் தேர்ச்சி
சென்னை: அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அப்போது, துரைப்பாக்கம்- பல்லாவரம் 200 அடி சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலையின் நடுவே தடுப்புசுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் சுபஸ்ரீயின் கனடா செல்லும் கனவும் கலைந்துவிட்டது. இந்நிலையில் அவர் கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.