துக்ளக் இதழின் பொன்விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் 1971ஆம் ஆண்டு ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து திராவிடர் கழகம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது என்றும் அதை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் என்றும் கூறியிருந்தார்.
உண்மைக்கு மாறான கருத்தை ரஜினி தெரிவித்துள்ளதாவும் அதற்காக ரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்டவேண்டும் என்றும் பெரியார் சிந்தனைவாதிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "நான் கற்பனையாக எதையும் கூறவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகையில் பார்த்தைத்தான் கூறினேன்’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக நமது ஈடிவி பாராத் தமிழ்நாடு ஊடகத்திடம் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் பேசுகையில், "ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நான் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அது உண்மைக்கு மாறான செய்தி என்றால் அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கேள்விப்பட்டதை சொன்னேன் என்று ரஜினி கூறினால் போதும் என்றே நான் கூறியிருந்தேன்.
இப்போதுகூட அவர் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. 2017ஆம் ஆண்டு அவுட்லுக்கில் வந்திருக்கிறது என்கிறார். அந்த அவுட்லுக்கையும் அவர் காட்டவில்லை. இரண்டாவது, 1971ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுக்கு 2017ஆம் ஆண்டு வெளியான பத்திரிகை செய்தி ஆதரமாகிவிடாது.