குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியனும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் நடந்து சென்றபோது கூட்டத்தில் அவரது பர்ஸ் காணாமல் போயுள்ளது. அதில் சுமார் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காசோலை உள்ளிட்டவை இருந்துள்ளது.