தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெச். ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - சுப. வீரபாண்டியன் புகார்

தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சுப.வீரபாண்டியன் புகார்
சுப.வீரபாண்டியன் புகார்

By

Published : Sep 29, 2021, 6:27 PM IST

Updated : Sep 29, 2021, 6:42 PM IST

சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் பாஜக மூத்தத் தலைவரான ஹெச். ராஜா மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சுப. வீரபாண்டியன், "கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ருத்ர தாண்டவம் திரைப்படத்தைக் கண்டுவிட்டு அதுபற்றிய கருத்துகளைக் கூற செய்தியாளரைச் சந்தித்த பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா சம்பந்தமில்லாமல் என்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பேசினார்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாக சுப. வீரபாண்டியன் பொய்யுரைப்பதால், அவரது மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது எனவும், சுப. வீரபாண்டியன் திமுகவின் தலைமை நிலையமான அறிவாலயத்தின் வாசலில் இருந்து பிச்சை எடுக்கிறார் எனவும் வயது வித்தியாசம் பாராமல் ஒருமையில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் தெரியாமல் ஒருமையில் பேசுவதையே ஹெச். ராஜா தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறார்.

சுப. வீரபாண்டியன் புகார்

திமுக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்

அதுமட்டுமல்லாமல் ஹெச். ராஜா பத்திரிகையாளர்கள் அனைவரையும் 'Presstitudes' என்ற சொல்லைப் பயன்படுத்தி வசைபாடியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவ்வாறு தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

மேலும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு காவல் துறையின் மூலம் ஹெச். ராஜா மீது நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் வராது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

Last Updated : Sep 29, 2021, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details