சென்னை:மாதவரம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன். இவர் நேற்றிரவு ( ஏப்.14 ) தனது நண்பர்களுடன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்த சென்றுள்ளார். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு சிவசங்கரன் அதற்குண்டான பணத்தை செலுத்த வேண்டி பில் கவுண்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கும் சேர்த்து பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
உடனே உதவி ஆய்வாளர் சிவசங்கரன் ‘நான் ஏன் உனக்காக பணம் செலுத்த வேண்டும்’ என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பார் ஊழியர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியதை அடுத்து சிவசங்கரன் காரில் தனது நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.