சென்னை: பூவிருந்தவல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜன். இவர் பூவிருந்தவல்லி அருகே உள்ள வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வரும் லாரி ஓட்டுநர்களிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
மேலும் தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய், ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் எனவும் மிரட்டியுள்ளார். அதேபோல் லாரி உரிமையாளர்கள் இன்ஜின் ஸ்பேர் என 10, 20 ஆயிரம் என செலவு செய்வார்கள், நாங்கள் கேட்கும் 100 ரூபாய்க்கு மட்டும் கணக்கு பார்ப்பார்கள் எனவும் புலம்பியுள்ளார்.