தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டை அர்த்த டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்' - காவல் உதவி ஆய்வாளர் டிக்டாக்

சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் 'இரட்டை அர்த்த டிக்டாக் காணொலிகளை' பதிவிட்டு வரும் உதவி காவல் ஆய்வாளரால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்'
டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்'

By

Published : Jun 25, 2020, 2:42 PM IST

டிக்-டாக் செயலியில் ஆபாச காட்சிகள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக கிளம்பிய சர்ச்சையின் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிக்-டாக் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டது. டிக்-டாக் பயன்படுத்துபவர்கள் அதிக ஃபாலோவர்ஸ் பெறுவதற்காக ஆபாசமாக நடிப்பது, விலங்குளை கொலை செய்வது, துன்புறுத்துவது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது உள்ளிட்ட காணொலிகளைப் பதிவிடுகின்றனர்.

அந்த செயலியை சிலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினாலும், பெரும்பாலும் ஆபாசம் நிறைந்த காட்சிகள், இரட்டை அர்த்தங்கள் கொண்ட காணொலிகள்தான் பகிரப்பட்டு வைரலாகிறது. அதனால் தவறான பாதைக்கு எளிதில் பயனர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். அந்த வகையில், டிக்டாக்கை பயன்படுத்தி இரட்டை அர்த்த காணொலி வெளியிட்டு வருகிறார் சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம்.

அவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிக்டாக்கில் பெண்களுடன் டூயட் பாடுவது, ஆடுவதுபோன்ற ஆயிரக்கணக்கான காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவை அனைத்தும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் கரோனா ஊரடங்கில் காவல்துறையினர் அனைவரும் பாதுகாப்பு பணியில் அயாரது உழைத்துவரும் இந்த நேரத்திலும் தினமும் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அவ்வளவு ஏன் இன்று காலை கூட 5க்கும் மேற்பட்ட காணொலிகளை வெளியிட்டுள்ளார்.

டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்'

அதில் வருந்தத்தக்கது என்வென்றால் பல கணொலிகள் காவல்நிலையத்தில் எடுக்கப்பட்டவை. பொறுப்பான காவல் உதவி ஆய்வாளர் பணியிலிருக்கும் காவலர் இப்படி செய்வதால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். அப்போது காவல்துறையினரின் நிலை கவலைக்கிடம்தான்.

விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய காவலர் இப்படி நடந்துகொள்வது ஏற்புடையது அல்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போதுள்ள சூழலில் காவல் பணி மன அழுத்தம் நிறைந்ததுதான் என்றாலும், அதற்கு காவல் உதவி ஆய்வாளர் இப்படி நடந்துகொள்ளவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details