சென்னை:கேளம்பாக்கம் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் இயக்குனர் வெற்றி மாறனின் "விடுதலை" படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மகாபலிபுரம் சாலை பகுதியில் வைத்து படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
சண்டைக் காட்சிகளில் நடித்துக் கொண்டு இருந்த பயிற்சியாளர் சுரேஷ் எதிர்பாராதவிதமாக ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ்(Stunt master suresh) சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் படப்பிடிப்பு 75 விழுக்காடு படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Hari Vairavan:நடிகர் சங்கம் உதவ வேண்டும்: ஹரி வைரவனின் மனைவி கோரிக்கை!