தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலை குறித்து அவதூறு... ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

stunt master kanal kannan arrested by cbi  stunt master kanal kannan  kanal kannan arrested  ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது  கனல் கண்ணன் கைது  கனல் கண்ணன்  ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்  பெரியார் சிலை குறித்து அவதூறு  பெரியார் சிலை
கனல் கண்ணன்

By

Published : Aug 15, 2022, 11:10 AM IST

Updated : Aug 15, 2022, 2:29 PM IST

சென்னை:வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 ஆம் தேதி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டு ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டுதல் , அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான கனல் கண்ணனை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கி இருந்த கனல் கண்ணனை சென்னை தனிப்படை காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 15) கைது செய்தனர்.

குறிப்பாக வழக்கறிஞர் ஒருவரின் பெயரில் புக் செய்து கடந்த 3 நாட்களாக கனல் கண்ணன் நட்சத்திர விடுதியில் பதுங்கி இருந்ததும், தகவல் அறிந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் விழுப்புரம் மாவட்ட காவலர்கள் உதவியுடன் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. 18 கிலோ தங்கம் மீட்பு

Last Updated : Aug 15, 2022, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details