தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரப்பாவிற்கு ஆதரவாக இரண்டு மாணவர்கள் போராட்டம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

university
university

By

Published : Nov 20, 2020, 2:03 PM IST

Updated : Nov 20, 2020, 3:46 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, அவரது மகளுக்கு முறைகேடாக பல்கலைக்கழகத்தில் பணி வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில், சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 2 பேர் பல்கலைக்கழக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரப்பாவிற்கு ஆதரவாக இரண்டு மாணவர்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான மாணவி பிரீத்தி பேசியபோது, ” அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையாக செயல்பட்டதால் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவர் நேர்மையாக செயல்பட்டதால் தான், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். எனவே, அவர் மீதான விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்.

டிசம்பர் இரண்டாம் தேதி பல்கலைக்கழகம் திறந்த பின்னர், அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோம் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விலக வேண்டும்: எஸ்எப்ஐ வலியுறுத்தல்!

Last Updated : Nov 20, 2020, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details