மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழிலாளி, தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்காக வழங்கியிருந்தார். இச்செயலினை பிரதமர் நரேந்திர மோடி மனதில் குரல் உரையில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.
இதையடுத்து அமைதி, முன்னேற்றத்துக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பான (UNADAP- United Nations Association for Development And Peace) என்றநிறுவனம் நேத்ராவை ஏழைகளுக்கான தூதராக அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முடி திருத்தும் தொழிலாளி மோகன், அவரது மகள் நேத்ராவின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.