இதுகுறித்து பேசிய முதுகலை பட்டப்படிப்பு மாணவர் ராஜாராமன், "சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் புத்திசம் பயிலும் மாணவர் கிருபா மோகனை நீக்கியது கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்திவருகிறோம்.
அம்பேத்கர், பெரியாரிய கருத்துக்களை பேசிய மாணவனை நீக்கிய பல்கலைக்கழகம்! - ஆளுநர்
சென்னை : அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்கப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதி சான்றிதழ் கொடுக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள் ஆனால் அம்பேத்கர், பெரியாரிய கருத்துகளை பேசியதற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரிய கருத்துக்களைத்தான் பேசுவோம். அப்படி பேசியதால் ஆளுநரிடமிருந்து அழுத்தம் வருகிறது.
பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன. பேராசிரியர் நியமனத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன, நீட்டில் இருந்து புதிய தேசிய கல்விக் கொள்கைவரை சமூகத்தில் பிரச்னைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மாணவர்கள் நாங்கள்தான் போராடுவோம். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டும்" என்றார்.