சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்வி கொள்கை 2020 திட்டம், நீட் தேர்வு (NEET EXAM) ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிருபன், ''நீட் தேர்வைச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் கையெழுத்திடாமல் தாமதம் காட்டுவது ஏன்? அவரிடம் பேனா இல்லையா?