தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வில் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்கள் பயன்படுத்த தடை - பொதுத்தேர்வில் வண்ண பென்சில் பயன்படுத்த தடை

சென்னை:10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

By

Published : Feb 25, 2020, 6:25 PM IST

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பொதுத் தேர்வுக்கான பணிகளை அரசு தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

அதில், பிறந்த தேதி, நிரந்தர பதிவெண், பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இத்தேர்வுகளுக்கான முக்கிய அறிவுரைகள் பள்ளி வளாகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி தேர்வின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை தேர்வு நுழைவுச் சீட்டில் (ஹால்டிக்கெட்) வெளியிட்டுள்ளது.

இதனை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும், செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை. அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் விதிகளின்படி வழங்கப்படும்.

இந்தத் தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்டேட்ஸ் பேனா அல்லது ஒன்றை பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.

தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாக பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.

குறிப்பாக, தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரை பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற செயல்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதற்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

எனவே தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:150 நாடுகளின் நாணயங்களைச் சேகரித்து அசத்திய சிறுவன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details