சென்னை:நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பாக 48 மணி நேரம் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது.
ஆளுநர் உடனடியாக நீட்டுக்கு எதிரான சட்ட மசோதாவைக் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பாக 48 மணி நேரம் உண்ணாவிரதம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் தொடங்கப்பட்டது.
அப்போது ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன் ( இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர்), "நீட் தேர்வு மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கிறது, நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பாக 48 மணி நேரம் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது முதலில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் பல்வேறு சொத்தையான காரணங்கள் கூறி திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது, லட்சக்கணக்கில் டியுசன் சென்டர்களில் கொள்ளையடிக்கின்றனர்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல் மீண்டும் இயற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார். அவர் உடனடியாக அனுப்ப வேண்டும் என்பதற்காக 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவெடுத்துள்ளோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ளனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மார்ச் 20: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.. எதற்கு இந்த கூட்டம்.. இதன் பயன் என்ன ?