தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'11ஆம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது'- மாணவர்கள் மகிழ்ச்சி - பதினொராம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது

சென்னை: இன்று (4. 3. 2020) நடைப்பெற்ற 11ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

students exclaim  as eleventh tamil language paper easy in public exam
students exclaim as eleventh tamil language paper easy in public exam

By

Published : Mar 4, 2020, 4:07 PM IST

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ் வழியில் பயின்ற 4 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.

எளிதான தமிழ் பாடத் தேர்வு

தேர்வு முடிந்த பின்னர் மாணவிகள் கூறும்போது, ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. மற்ற வினாக்கள் எளிதாக தேர்வு எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. மேலும் பாட புத்தகத்தை முழுவதுமாக படித்திருந்ததால், எங்களுக்கு இந்தத் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... நொறுங்கிப்போன முறுக்குத் தொழில்! - நொந்துபோன தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details