தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2019, 6:27 PM IST

Updated : Apr 12, 2019, 7:28 AM IST

ETV Bharat / state

'மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு' அம்பேத்கர் சட்டக்கல்லூரி வலியுறுத்தல்!

சென்னை: மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் குறித்த அறவிப்பினை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லுாரி

இது குறித்து பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளதாவது:

ஐந்தாண்டு (ஹானர்ஸ்), மூன்றாண்டு சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கறுப்பு நிற கால்சட்டை, வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து டக்-இன் செய்து, கறுப்பு நிற பெல்ட் அணிந்து, அடையாள அட்டையுடன், கறுப்பு ஷூ அணிய வேண்டும்.

அதேபோல் மாணவிகளும் வெள்ளை நிறத்தில் சால்வர், வெள்ளை குர்தா (முழங்கால் வரை) கறுப்பு நிறத்தில் இடுப்பு வரையிலான அளவில் கோட் அணிய வேண்டும்.

மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், அரை கை சட்டை, டி-சர்ட், லெக்கின்ஸ், குட்டை பாவாடை, சுடிதார் மற்றும் டிசைன் ஷூ போன்றவை அணிவதற்கு கட்டாயம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் தலை முடியை நன்றாக வெட்டி அழகுப்படுத்திக் கொண்டு வர வேண்டும். மேலும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும்.

கல்லூரிக்கு வரும் நேர கட்டுப்பாடு

காலை 9.30 மணிக்கு பிறகு கல்லுாரி வளாகத்தின் முன் மற்றும் பின்பக்க வாயில் கதவுகள் மூடப்படும். அதன் பின்னர் மாணவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.30 மணி முதல் மதியம் 1.20 மணி வரையில் மாணவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மதியம் வகுப்பில் இரண்டு மணிக்கு கதவுகள் மூடப்படும். அதேபோல் மதியம் 2 மணி முதல் 5.15 மணி வரை மாணவர்கள் வெளியில் செல்லவோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 12, 2019, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details