தமிழ்நாடு, புதுச்சேரியில் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழாயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.பொதுத்தேர்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விருப்ப மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ் வழியில் பயின்ற நான்கு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ் மொழி பாடத்தில் தேர்வு எழுதினர். காலை 10 .15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1. 15 மணிக்கு முடிவுற்றது. தேர்வினை முடித்துவிட்டு வெளியில் வந்த மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.