சென்னை: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் 1ஆவது தெரு சந்திப்பில் நேற்று (நவ.25) நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ரோந்து வாகனத்தில் சென்ற காவலர்களான முருகன் மற்றும் சரத்குமார் ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களைக் கலைந்து செல்லும் படி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், இளைஞர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையினர் வாகனத்தின் மீது கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அந்த நபரை லத்தியால் தாக்கியதால், பதிலுக்கு மாணவர்கள் கட்டையைக் கொண்டும் கல்வீசியும் காவலர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, காவலர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக ரோந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவலர்களைத் தாக்கிய 3 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.