மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதும், மக்களின் உணர்வுகளோடு கலந்து வீரத்தின் அடையாளமாக கருதப்படுவதுமான சிலம்பக் கலை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
சிலம்பம், பரதநாட்டியத்தில் மாணவ மாணவிகள் சாதனை முயற்சி! - Bharatanatyam
சென்னை: தொடர்ந்து 60 மணி நேரம் சிலம்பம், பரதநாட்டியம் ஆடி மாணவ மாணவிகள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
சிலம்பம், பரதநாட்டியத்தில் மாணவ மாணவிகள் சாதனை முயற்சி!
தனியார் அமைப்பு நடத்திய இந்த நிகழ்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுழற்சி முறையில் 60 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றியும், மாணவிகள் பரதநாட்டியம் ஆடியும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு விளையாட்டுகளில் மாணவர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது. இதைத்தடுத்து, சிலம்பக் கலையை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.