தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை: இருவர் போக்சோவில் கைது - sexual harrasement

சென்னை: அரும்பாக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியம்மா மகன் உட்பட இருவரை போக்சோ சட்டத்தின் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

fdas
dfas

By

Published : Apr 21, 2021, 5:08 AM IST

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்டட வேலை செய்யும் செய்யும் தம்பதியின் 17 வயது மதிக்கத்தக்க மகள் அதே பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். வேலை விஷயமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கம் அசோகா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தாயும், மகளும் குடியேறி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிப்பவர் பசுபதி (26). இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 17ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் சாந்தி தேவி தலைமையில் கொண்ட போலீசார் தேடி வந்தபோது நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரும் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு பசுபதியை கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வந்து சிறுமியிடம் விசாரணை செய்ததில் பசுபதி சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மற்றொருவர்

மேலும் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி, சிறுமியின் உறவினரான செந்தில் (37) என்பவர் வீட்டில் யாரும் இல்லாதபோது அடிக்கடி சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மற்றும் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பசுபதி மற்றும் பெரியம்மா மகன் செந்தில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details