சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2021 இல் அளிக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாத நிலையில், வழக்கை நடத்த முடியாது என கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.