சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வந்தவர், ஸ்ரீமதி (18). இவர் படித்து வந்த கல்லூரி விடுதியில் உணவுகள் சரியாக இல்லை எனக் கூறிய நிலையில், மயிலாடுதுறையில் இருந்த ஸ்ரீமதியின் பெற்றோர் குரோம்பேட்டை பகுதியில் மகளுடன் வசித்து வந்தனர்.
நேற்று (டிச.18) சொந்த ஊரில் இருந்த வீட்டினை காலி செய்வதற்காக, மயிலாடுதுறைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் செல்போனுக்கு 4 முறை தொடர்புகொண்ட பெற்றோரின் அழைப்பை, ஸ்ரீமதி எடுக்கவில்லை. பின்னர், சிறிதுநேரம் கழித்து, ஸ்ரீமதி அவரின் அம்மாவுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, “எப்போதும் மொபைல் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறாய். ஆனால், நாங்கள் கால் செய்தால் மட்டும் எடுக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆகிறது” என கண்டித்துள்ளார். இதனையடுத்து பேசிக் கொண்டே இருந்த ஸ்ரீமதி போனை கட் செய்துள்ளார். பின்னர் பலமுறை கால் செய்தும் ஸ்ரீமதி போன் எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவரது தாய் வீட்டின் அருகில் உள்ள நபருக்கு கால் செய்துள்ளார்.