தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - Chennai district news

தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 2, 2021, 11:21 PM IST

Updated : Jul 5, 2021, 1:41 PM IST

சென்னை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை rte.tnschools.gov என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

பள்ளியின் தொடக்க நிலை வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 10ஆம் தேதி குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும். தேர்வான மாணவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர வேண்டும்.

இதுகுறித்து ஏதேனும் குறைகள் இருப்பின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமோ, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்திலோ புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jul 5, 2021, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details