தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைகளை மீறியதால் நேர்ந்த துயரம்! - மெரினா

சென்னை மெரினா கடற்கரையில், தடைகளை மீறி குளிக்கச் சென்ற 11 பள்ளி மாணவர்களில், ஒருவர் ராட்சத அலையில் சிக்கி நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

marina beach  chennai marina beach  marina beach death  student dead in marina beach  student drown in sea and death  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  அண்மை செய்திகள்  நீரில் மூழ்கு உயிரிழப்பு  மெரினா கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்  மெரினா கடற்கரை  கடற்கரை  மெரினா  சென்னை மெரினா
மாணவன் உயிரிழப்பு

By

Published : Oct 14, 2021, 10:43 AM IST

சென்னை:மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறத்தில், நேற்று (அக்டோபர் 13) 11 பள்ளி மாணவர்கள் குளித்து விளையாடினர். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் இரண்டு மாணவர்கள் சிக்கியுள்ளனர். அதில் ஒருவரை நண்பர்கள் மீட்டு கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றிய நிலையில், மற்றொருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில் கடலில் மூழ்கிய மாணவன் தனுஷ் (17) ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தது தெரியவந்துள்ளது. காப்பாற்றப்பட்ட மாணவன் ஆகாஷ் (17) ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தேடும் பணி

இதையடுத்து கடலில் மூழ்கிய மாணவனை மெரினா தீயணைப்பு மீட்பு படையினர், மீனவர்களின் உதவியுடன் தேடிவருகின்றனர். இதேபோன்று சைதாப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற ஐடிஐ மாணவன், நண்பர்களோடு மெரினா கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது காணாமல்போயுள்ளார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புக் பணிகள் குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி குளிக்கச் சென்று காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு உதவி மையங்கள் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டும், தடையை மீறி குளிக்கச் சென்று கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.

இதையும் படிங்க: 3 நாள்கள் தொடர் விடுமுறை... உற்சாகத்தில் அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details