தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவொற்றியூரில் கரையில் ஒதுங்கிய மாணவர் சடலம்! - மாணவர் சடலம் மீட்பு

சென்னை: திருவொற்றியூர் கடற்கரை அருகே கரை ஒதுங்கி மாணவர் ஒருவரின் சடலம், நேற்று காணாமல் போன இரண்டு சகோதர்களுள் ஒருவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Student corpse shores near Thiruvottiyur beach

By

Published : May 5, 2019, 7:57 PM IST

திருவொற்றியூர், ஈசானமூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்த மதன் சஞ்சய் ஆகிய இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே சகோதரர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றது. இவர்கள் கடலுக்குச் சென்றதை அறியாத பெற்றோர்கள், இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

திருவொற்றியூரில் கரையில் ஒதுங்கிய மாணவர் சடலம்

இந்நிலையில், இன்று காலை திருவொற்றியூர் கடற்கரை அருகே ஒரு மாணவனின் உடல் சடலமாக கிடப்பதை கண்ட மீனவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கண்டெடுக்கப்பட்ட சடலம் சஞ்சையுடையது என அடையாளம் காணப்பட்டது.

தொடர்ந்து, சஞ்சையின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காணாமல்போன மதனை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details