இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவைச் சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்குள் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலத்தை கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக குறுவைப் பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட வழி காணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிமுக அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
'குறுவைச் சாகுப்படிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை' - ஸ்டாலின் கோரிக்கை - dmk leader
சென்னை: "மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்குள் குறுவை சாகுப்படிக்கு தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்" என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால், அதிமுக அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.