சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில், 'பக்கவாதம்' குறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க இருசர வாகன விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இரண்டு நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் நான்கு நாள்களில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றனர். பயணிக்கும் வழித்தடங்களில் உள்ள பல இடங்களில் பக்கவாதம் குறித்து 40 விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்துகின்றனர்.
இது தொடர்பாக சென்னை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் இருவர் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பரப்புரைப் பேரணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவர்களை வாழ்த்தி அனுப்பும் நடிகர் ஆர்யா பக்கவாத அறிகுறிகள் தெரிந்தால் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் உரிய சிகிச்சை முறைகள் தொடங்கப்பட்டு அதைத் தொடர வேண்டும் என்பதையும், பக்கவாதம் ஏற்படும்போது நேர மேலாண்மை மிகவும் முக்கியம் என்பதையும் மக்களுக்கு எடுத்துரைத்து விளக்குவதே இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் நோக்கமாகும்" எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரியில் நிறைவடையும் இந்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பரப்புரைப் பயணம் டிசம்பர் 12ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை நடைபெறுகிறது. மாநில ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் இந்த விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணத்தைக் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: சாகித்ய அகாடமி விருது வென்ற யு.ஏ. காதர் காலமானார்!