தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்... ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு! - பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி 28 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Etv Bharatstrike-will-go-ahead-as-planned-announcement-of-federation-of-teachers-movements
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்...ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

By

Published : Jul 23, 2023, 9:16 PM IST

சென்னை:அரசு ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் தொகுப்பதி ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பி விட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைபு சார்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் இன்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினர்.ஆனால் 27 மாதங்கள் உருண்டோடியும் வாக்குறுதி நிறைவேற்றப்படதது மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும் அளிக்கிறது.

தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கு ஊக்க ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,தொகுப்பதி ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்,அவர்களது பணி காலத்தை மட்டுமே தேவையான தகுதியாக கொள்ள வேண்டுமே தவிர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை தமிழக அரசு முழுமையாக நிராகரித்து அதற்கு தேவையான சட்ட விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்

ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களையும் இதர படிகளையும் மாற்றி உயர்த்தி அமைக்க ஊதிய குழுவை மற்றும் மாநில அரசுகளை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விக்கான தனியாக ஒரு இயக்குனராகத்தை உருவாக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை அமுல்படுத்தாத ஆசிரியர் பிரிவுக்கு விரைந்து அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பி விட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களை அழைத்து 25ஆம் தேதி பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆலோசனை நடத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.ஆனால் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ரூ.30 லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனர் தாக்குதல்! வனத்துறை ஊழியர் வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details