தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு! - democracy

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகின்ற 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல்  போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்

By

Published : Apr 9, 2023, 4:35 PM IST

சென்னை:இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் நிறுவன நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி சத்தியமூர்த்தி பவனில் கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "ஜனநாயகம் என்பது வேறு சர்வாதிகாரம் என்பது வேறு. ஜனநாயகத்தில் எதுவேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம். ஆனால் சர்வாதிகாரம் அனைத்தையும் கணக்கு எடுக்கும். மோடியின் ஆட்சி இன்று அதைத்தான் செய்கிறது. ஊடகத்தின் குரல்வலையை நெரிக்கின்றது. ஜனநாயகம் சீர்கெட்டு போகிறது என்று சொல்வது தேச விரோத வார்த்தை இல்லை. சிறந்த ஜனநாயகம் இவர்களின்(பாஜக) ஆட்சியால் சீரழிந்து இருக்கிறது” என தன் கண்டனங்களை பதிவுசெய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜனநாயகத்தை பாதுகாக்கவே நேற்று பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளும் கட்சியின் கடமை. அப்போது தான் எதிர்கட்சி முறையாக செயல்படுகிறதா என்று தெரியும். மூன்று தலைமுறையாக தொழில் நடத்தி வருபவர்கள் வளர்ந்து வருகிறார்கள்.

ஆனால், வட இந்தியாவில் அதானி குழுமம் வீங்கி வருகிறது. வளர்ச்சிக்கும் வீக்கதிற்கும் வித்தியாசம் உள்ளது. அதானி நிறுவனம் வளர்வதற்கு பதில் வீங்கி கொண்டு இருக்கிறது. அவரின் வளர்ச்சி வீக்கத்திற்கு காரணம் என்ன என்று கேட்டால் அது தவறா? மேலும் அதானி குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் “15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 76 காங்கிரஸ் மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் செய்வோம். 20 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டம் செய்துள்ளோம்" என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியில் பிரதமர் வரும் போது மிக அருகில் கருப்பு கொடி போராட்டம் செய்யப்பட்டது ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்தது சரியாக பதிவு செய்யப்பட்டதாக இருந்தது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர்,

”ஒரு போராட்டம் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். அதை அண்ணா சாலையில் பதிவு செய்தாலும் வள்ளுவர் கோட்டத்தில் பதிவு செய்தாலும் ஒன்று தான். அதை இந்த இடத்தில் தான் பதிவு செய்ய வேண்டும் என்பது ஓர் தாழ்வு மனப்பான்மை” எனக் கூறினார். தொடர்ந்து பாஜக உடன் திமுக இணைய எண்ணம் உள்ளதாக சொல்லப்படும் கேள்விக்கு, எண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என நிறைவாக யூகங்களின்றி பதிலளித்தார்.

இதையும் படிங்க:அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details