தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினர் மீது பொய் குற்றச்சாட்டு அளித்தால் கடும் நடவடிக்கை: நீதிமன்றம்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல் துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினர் மீது பொய் குற்றச்சாட்டு அளித்தால் கடும் நடவடிக்கை:நீதிமன்றம்
காவல்துறையினர் மீது பொய் குற்றச்சாட்டு அளித்தால் கடும் நடவடிக்கை:நீதிமன்றம்

By

Published : Nov 23, 2022, 10:36 PM IST

சென்னை: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் காவல் துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு காரணமாக காவல் துறை தங்கள் சட்டப்பூர்வமான கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது. காவல் துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால், அதன் உண்மை தண்மை குறித்து விசாரித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் சட்டம் - ஒழுங்கு பராமரிக்கும்போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் காவல் துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாக செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்ததுடன், ஏழு காவல் துறையினருக்குத் தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் 35 ஆயிரம் ரூபாயை காவல்துறை ஆணையரிடம் நான்கு வாரங்களில் வழங்க வேண்டும்; அதனை காவல்துறை ஆணையர் சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கூகுளில் 10,000 பேர் திடீர் பணி நீக்கம்: காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details