தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சூர்யா பட பாடலில் சர்ச்சை வரிகள் : நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை : நடிகர் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி அளிக்கப்பட்ட புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc
hc

By

Published : Sep 16, 2020, 12:18 PM IST

நடிகர் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள ”மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு...” எனத் தொடங்கும் பாடலில், "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற பாடல் வரிகள் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022ஆம் ஆண்டு வரை இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடன் புகார் அளித்துள்ளார். ஆனால், கார்த்திக்கின் புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று (செப்.16), இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்தப் புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படியும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details