தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவரின் ஓட்டையில் சிக்கிய நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் - தீயணைப்பு வீரர்கள்

சென்னை: ஆவடி அருகே சுவரின் ஓட்டையில் சிக்கிய நாயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Street dog saves
Street dog saves

By

Published : Nov 20, 2020, 7:45 AM IST

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு, ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் மழைநீர் செல்வதற்காக பக்கவாட்டு சுவற்றில் துவாரம் போடப்பட்டு பிளாஸ்டிக் பைப் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தத் துளையில் நாய் ஒன்றின் கழுத்து சிக்கி கொண்டது. அதிலிருந்து நாய் வெளியேற முடியாமல் அவதிப்பட்டிருந்துள்ளது.

இதனை பார்த்த, பொதுமக்கள் சென்னை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு அதிகாரி வீரராகவன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சுவற்றை உடைத்து அதில் சிக்கியிருந்த நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

அதன் பிறகு, உயிர் தப்பிய நாய் அங்கிருந்து மகிழ்ச்சியில் தெருவில் துள்ளி குதித்து ஓடியது. மேலும், தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details