தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைதாப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சைதாப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும்

சென்னை: சைதாப்பேட்டையில் வசித்து வரும் மக்களுக்கு அரசாணையின்படி பட்டா வழங்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பட்டா வழங்க வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

By

Published : Nov 21, 2019, 3:28 AM IST

தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகர், கோட்டூர்புரம் சூர்யா நகரில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்குமாறு சென்னை கிண்டி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

அப்போது குடியிருப்பு வாசிகள் 50க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பீமாராவ், "வசிக்கும் இடத்திற்கு பட்டாக்கோரி, சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகர், கோட்டூர்புரம் சூர்யா நகர் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பட்டா வழங்க வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

அரசாங்கம் பிறப்பித்த ஆணை 318 இவர்களுக்கும் பொருந்தும். எனவே, இதில் வட்டாட்சியர் அல்லது வருவாய் அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு இவர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆதாயத்திற்காக இதில் அரசு ஏதாவது தில்லு முல்லு செய்யும்பட்சத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி நடத்தும். அதற்கான முன்னெடுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : துண்டு பிரசுரங்களை வழங்கி அகில இந்திய வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட்

ABOUT THE AUTHOR

...view details