தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடனே பாடம் எடுக்க வேண்டாம் - ஆசிரியர்களுக்கு லியோனி அறிவுரை - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர்

நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு நேரடியாகப் பாடம் எடுக்காமல் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி அறிவுரை வழங்கியுள்ளார்.

dfs
dfs

By

Published : Sep 2, 2021, 6:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாள்களாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 1) 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மறைமலையடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி இன்று (செப்டம்பர் 2) ஆய்வுசெய்தார். மாணவர்களிடம் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து கேட்டறிந்து, ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, "பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நேரடியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தாமல் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டும், தனிச் திறனை வெளிப்படுத்தச் செய்து அவர்களைத் தயார்ப்படுத்திய பிறகு பாடங்களை நடத்த அறிவுறுத்தினேன்.

பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் ஐ. லியோனி

அதனைத் தொடர்ந்து லியோனி, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி ஆகியோர் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினர்.

இதையும் படிங்க:விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - திருவள்ளூர் ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details