சீன நாட்டில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில், சீன மக்கள் நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடைவிதித்தது.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, விளையாட்டு பொம்மைகள் நிரம்பிய கண்டெய்னரில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பூனைக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் கரோனா பரவும் அச்சம் நிலவியதால் பூனை அரசு கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கு பீட்டா உள்பட பல விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவந்தனர்.