உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக செல்போன் அழைப்புகளின்போது, இருமலுடன் தொடங்கும் விழிப்புணர்வு விளம்பரத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மத்திய சுகாதாரத் துறை விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த விழிப்புணர்வு விளம்பரத்தைத் தடைசெய்யக் கோரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ”இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
’கொரோனா காலர் ட்யூன் எரிச்சலை ஏற்படுத்துகிறது’ - தடைசெய்யக் கோரி வழக்கு! - Stop irritating corona virus ring tones
சென்னை: இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காலர் ட்யூனை தடைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் எரிச்சலூட்டும் வகையிலும் உள்ளது. குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் ரிங்டோன் பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்: மாநில மொழிகளில் வழங்க கனிமொழி, ராமதாஸ் வலியுறுத்தல்!