ஐடி நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை இணைய சேவை இன்றியமையாதாகிவிட்டது. இணைய சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அனைவருக்கும் தடையின்றி, அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் அடுத்த தலைமுறை 5ஜி இணைய தொழில்நுட்பம் குறித்து உலகளவில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் 5ஜி இணைய சேவையை படிப்படியாக நடைமுறைபடுத்தி வருகின்றன.
அந்த வகையில், 5ஜி தொழிநுட்பத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், சென்னை ஐஐடி நிறுவனம், சர்வதேச இணை தொழில்நுட்ப நிறுவனமான ஸ்டெர்லைட்டுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை தொழிநுட்ப அலுவலர் பத்ரி கோமதி பேசுகையில், "நாம் 5ஜி காலத்துக்குள் நுழையவுள்ளோம். அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐஐடி உடனான இந்த கூட்டுமுயற்சி மூலம் 5ஜி தொழில்நுட்பத்தின் முழு திறனையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்" என்றார்.
சென்னை ஐஐடி மின் மற்றும் மின்னணு துறை தலைமை பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளை கூறுகையில், "ஆய்வுக்கு கண்காணிக்கும் தலைமை பேராசிரியருக்கு ஸ்பான்சர் செய்யமுன்வந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் 5ஜி இணைய சேவையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும், தகுதிவாய்ந்த இளம் தலைமுறையினரின் வளர்ச்சிக்கும் இது உதவும்" என்றார்.
இதையும் படிங்க : நாசா செல்லும் புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி - உதவி செய்ய வாருங்கள் தோழர்களே!