கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகி தேவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "கோவை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டரை அச்சடித்த அச்சகத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களும் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது என்றும் எனவே இந்தப் போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 25ஆம் தேதி கோவை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.