ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் இன்று ஒன்பதாவது நாளாக விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அப்போது, தாமிர கழிவுகள் அபாயகரமான கழிவுகள் அல்ல என்ற வேதாந்தா தரப்பு வாதம் தவறு. சட்டப் பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் சேர்க்கப்படாவிட்டாலும், வேதியியல், உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவும் அபாயகரமான கழிவு பட்டியலில் அடங்கும் என தெரிவித்தார்.
விதிகளை மீறிய வேதாந்தா நிறுவனம் அனுமதி மறுப்பு -அரசு தரப்பு வாதம் - chennai
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் எல்லை மீறியதால், விதிகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆலைகளை திறக்க அனுமதி வழங்கவும், மூடவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆலைகள் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.ஆலை திறக்க கோருவது அடிப்படை உரிமை அல்ல. நீர் நிலைகளில் தெரிந்தே மாசு ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது மாநில அரசின் அனுமதியின்றி எந்த ஆலையையும் திறக்க முடியாது என வாதிட்டார.
மேலும், தூத்துக்குடி பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை சோதித்ததில் அவை பயன்படுத்த தகுதியற்றவையாகவே உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டிய கடமையை செய்ய ஆலை நிர்வாகம் தவறிவிட்டது எனக் குறிப்பிட்டார். அரசு தரப்பு வாதம் நாளையும் தொடர இருக்கிறது.