தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில எடுப்பு அசல் வழக்குகளை விரைந்து தீர்வு காண நடவடிக்கை - சிப்காட் - சிப்காட் வேலைவாய்ப்பு

சென்னை: சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைப்பதற்காக நிலுவையில் உள்ள 1,737 நில எடுப்பு அசல் வழக்குகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சிப்காட் தெரிவித்துள்ளது.

சிப்காட்
சிப்காட்

By

Published : Oct 9, 2020, 12:29 AM IST

மக்கள் நீதிமன்றம் மூலம் 1,737 நில எடுப்பு அசல் வழக்குகளை (LAOP) விரைந்து தீர்வு காண
சிப்காட் நிறுவனம் துரித நடவடிக்கை கொண்டுவருவதாக சிப்காட் மேலாண்மை இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்காக அரசு புறம்போக்கு நிலம் மட்டுமல்லாது பட்டா நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நில எடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதில் இழப்பீட்டுத் தொகையினை உயர்த்தி தரக்கோரி சார்பு நீதிமன்றங்களில், நில எடுப்பு திட்டம், கிராமங்கள் வாரியாக பல நில எடுப்பு அசல் வழக்குகள் (LAOP) தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
எனவே பின்வரும் கிராமங்களில் உள்ள வழக்குகளுக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு காண சிப்காட் நிறுவனம் முன் வந்துள்ளது.
இதனால் நிலுவையில் உள்ள 1,737 நில எடுப்பு அசல் வழக்குகளை (LAOP) மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண சிப்காட் நிறுவனம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எனவே, கேட்புதாரர்கள் (Awardees) தங்களுடைய வழக்கு தொடர்பான அனைத்து விதமான அசல் ஆவணங்கள் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட தனி வட்டாட்சியர்களை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ அணுகலாம்.
நில எடுப்பு திட்டத்தின் பெயர், சிப்காட், இருங்காட்டுகோட்டை தொழிற்பூங்கா, சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற் பூங்கா என்ற பெயரில், இருங்காட்டுகோட்டை காட்ரம்பாக்கம் தண்டலம், ஸ்ரீபெரும்புதூர், சந்தவேலூர் ஆகிய இடங்களில் இடங்கள் வைத்திருக்கும் நபர்கள் தனிவட்டாட்சியர் (நில எடுப்பு) ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுகோட்டை திட்டம் குன்றத்தூர் மெயின் ரோடு, பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 602 105 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சிப்காட் ஒரகடம் தொழில் வளர்ச்சிமையம் என்ற பெயரில் ஓரகடம் என்ற இடத்தில், நிலம் வைத்திருக்கும் நபர்கள், தனிவட்டாட்சியர் (நில எடுப்பு) ஒரகடம் தொழில் வளர்ச்சி திட்டம், குன்றத்தூர் மெயின் ரோடு, பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 602 105 என்ற அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இதன் தொடர்பான விவரங்கள் பெறுவதற்கு 044- 45261776 என்ற தொலைபேசி எண் மூலம் அலுவலக வேலை நாள்களில் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details