தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் - விஜயதரணி - 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம்

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயதரணி தெரிவித்துள்ளார்.

Steps may be taken to release 7 from jail vijayatharani
சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் - விஜயதரணி!

By

Published : Feb 17, 2020, 7:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது விஜயதரணி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரோடு சேர்த்து 18 பேர் உயிரிழந்தனர்.

என் தாயாரும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பகவதி உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும். அந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும்

கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சியே வந்துவிட்டது. அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி கூட அவர்களை மன்னித்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி

இந்திய சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். இது தொடர்பில் தமிழ்நாடு அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் - தமிமுன் அன்சாரி

ABOUT THE AUTHOR

...view details