தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறவைக் காய்ச்சலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் - health secretary radhakrishnan

சென்னை: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

By

Published : Jan 5, 2021, 3:21 PM IST

Updated : Jan 5, 2021, 7:13 PM IST

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கரோனா தடுப்பூசி வைக்க தயார் செய்யப்பட்டுள்ள குளிர்சாதன சேமிப்பு வசதியுடன் கூடிய கிடங்கில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைக்க முடியும். தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் 51 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேமிப்பு கிடங்குகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

உருமாறிய கரோனா:

இங்கிலாந்திலிருந்து வருகை தந்த 24 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய 20 பேருக்கும் என 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 12 பேரின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்களில் 4 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சை முறையில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை:

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டள்ளது. தமிழ்நாட்டிற்கு பறவை காய்ச்சல் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். சுகாதாரத் துறை சார்பாக 6 மாவட்ட எல்லைகளில் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் கால்நடைகள் சோதனை செய்யப்படுகிறது.

கட்டுக்குள் கரோனா அச்சம் வேண்டும்:

சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் பரிசோதனை நடத்தியதில் 2.7 விழுக்காட்டிற்கு கீழ்தான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து பரிசோதனை செய்துவருகிறோம். எனவே பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம். தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900க்கும் கீழ் வந்துள்ளது.

முழு இருக்கைகளுடன் திரையரங்கம்:

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் திரையரங்குகள் 100 விழுக்காடு இருக்கைகளோடு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 விழுக்காடு இருக்கைகளோடு திரையரங்குகள் திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்டுக்குள் வரும் கோவிட்-19: ஆறு மாதங்களில் குறைவான பாதிப்பு!

Last Updated : Jan 5, 2021, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details