சென்னை:விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அலுவலரின் கணவனான அன்பழகனிடம், வங்கியிலிருந்து பேசுவதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.
அப்போது அன்பழகனிடம் தங்களுடைய எஸ்பிஐ வங்கிக் கணக்கினை புதுப்பிக்க வேண்டும் என கூறி, அவருடயை தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கூறும்படி கேட்டுள்ளனர்.
இதனை உண்மை என நினைத்து, தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார் அன்பழகன். இதையடுத்து எண்ணை கூறிய சில நிமிடங்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கையாடியுள்ளனர்.