சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகின் பல நாடுகள் தற்போது சிக்கித்தவிக்கின்றன. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா எனப் பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா பாதிப்பைத் தடுக்க 21 நாள்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 649 பேர் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.