சென்னை:ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை (ஜன.11) ஒரே நாளில் வெளியாகிறது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறினார்.