திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறான கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - senthil balaji
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் கருத்துகளை பேசியதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தனிப்பட்ட முறையில் யாரின் பெயரையும் குறிப்பிட்டு களங்கப்படுத்தும் நோக்கத்துடன் பேசவில்லை. காவிரி விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பேசியதை எவ்வாறு அவதூறாக பேசியதாகக் கூற முடியும். எனவே, தன் மீது நாமக்கல் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்களித்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, முகாந்திரம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.