தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்! - Status co order for high elevator power cable project

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்கக் கோரிய வழக்கில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Oct 7, 2019, 4:38 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியம், தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு துணை மின்நிலையம் அமைப்பதற்காக சேவகாணபள்ளி கிராம விவசாய நிலங்கள் மீது உயர் கோபுரம் அமைத்து உயர் மின் அழுத்த தனியார் தொழிற்சாலைக்கு எடுத்து செல்வதால் தங்களின் விவசாய நிலங்கள் சேதமாகுவது மட்டுமல்லாமல் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி விலை நிலங்களுக்கு சந்தை விலை மதிப்பு இழந்து, பெரும் பொருள் நஷ்டம் ஏற்படும்.

சென்னை உயர் நீதிமன்றம்

ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் பரப்பளவும் விளைச்சலும் குறைந்துகொண்டே வரும் சூழலில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகளை பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பரந்தாமன், தற்போது அரசு தீர்மானித்து இருக்கும் வழித்தடம் குறிப்பிட்ட இலக்கை அடைய சுமார் 10 கி.மீ தூரம் மின் கம்பியை எடுத்துச் செல்வதால் விவசாய நிலங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும். அரசுக்கு மிகப்பெரிய பொருட்செலவு ஏற்படும்.

எனவே, கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுதாரர்கள் அளித்துள்ள மாற்று வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வெறும் மூன்று கி.மீ தூரத்தில் உயர்மின் கம்பியை எடுத்துச்சென்றுவிடலாம். இதனால் குறைவான விவசாய நிலங்களே பாதிப்புக்குள்ளாகும். எனவே மாற்றுப் பாதை திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள மாற்று வழிப்பாதை முன்மொழிவு குறித்து அரசிடம் உரிய கருத்து பெறும்படியும் அதுவரை மனுதாரர்கள் விவசாய நிலங்களில் மின் அழுத்த உயர் கோபுரம் அமைக்கக்கூடாதெனவும் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details